ஒவ்வொரு சராசரி மனிதனின் பிரதிபலிப்பு

துன்பம் வந்த போதும் துவண்டு விடாதே !

நீ நீயாக இரு, உலகம் உன்னை போல் இருக்க ஆசைப்படும் 🙌

~கம்பத்து கவிஞன்

நான்

ஏழையாகப்
பிறந்தாலும்,
நேர்மையானவன்

தாயுடன் கஸ்ட்டத்தில் வாழ்ந்தாலும்,
சிரிப்பவன்,

மேல் படிக்க ஆசை இருந்த
போதும்,
உடன்பிறந்தோர்க்கு
உழைப்பவன்,

துரோகம் பல
வந்த போதும்,
ஓரம் தள்ளி
மேலே செல்பவன்,

கஷ்டம் ஒன்றே வாழ்க்கை
ஆனா போதும்,
தாயிடம் இன்பத்தை மட்டுமே
காட்டுபவன்,

ஆசைகள் பல இருந்த
போதும்,
காரணமின்றி
காதலியை காயப்படுத்துபவன்,

வாழ்க்கை என்னை உதைத்து தள்ளுகின்ற இந்த தருணத்திலும்,
தாயின் புன்னகைக்கு ஏங்குபவன்,

துன்பம் பல
வந்த போதிலும், கேலி செய்தோர் முன் போராடுபவன்

நான்.

2 thoughts on “ஒவ்வொரு சராசரி மனிதனின் பிரதிபலிப்பு

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started